Menu

சோள ரவை கேக்


தேவையான பொருட்கள்:

சோள ரவை : 1 1/4 கப்
தேங்காய்ப் பால் : 1 1/2 கப்
வெல்லம் : 3/4 கப்
வாழைப்பழம் : 2 / 3
உப்பு : சிட்டிகை அளவு
வெண்ணெய் அல்லது நெய் : 2 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. முதலில் 1/2 கப் தேங்காய் எடுத்து அரைத்து 1 1/2 கப் பால் எடுக்கவும்..
  2. பிறகு துண்டாக்கிய வாழைப்பழம் மற்றும் வெல்லம் இரண்டையும் மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக எடுக்கவும்
  3. ஒரு வாணலியில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சோள ரவையை சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும்.. பொன் நிறமாகி நல்ல வாசனையுடன் இருக்கும் போது அடுப்பை அணைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் வறுத்த சோள ரவை, தேங்காய்ப்பால், வாழைப்பழ வெல்ல விழுது, சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  5. அக்கலவையை எண்ணெய் தடவிய கேக் டின் அல்லது ஒரு தட்டில் ஊற்றவும்
  6. பிறகு இட்லி சட்டி அல்லது குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அந்த தட்டை வைத்து முதல் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து பிறகு 30 நிமிடங்கள் (அல்லது வேகும் வரை) குறைந்த தீயில் வைக்கவும். ஒரு ஃபோர்க்கை உள்ளே விட்டு எடுத்தால் ஒட்டாமல் வரும்.
  7. வெந்த உடன் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியவுடன் துண்டுகளாக்கி பரிமாறவும்
எனது டிப்:
சாதாரண ரவையை வைத்தும் இது போல செய்யலாம்

No comments:

Post a Comment

Comments system