Menu

க்வில்லிங் செயின் (மறுசுழற்சி)



இந்த அழகான செயின் செய்வதற்கு ரொம்ப எளிது! அதே சமயம் பார்ப்பதற்கு பாரம்பரியமான லுக் தரும். இந்த செயின்ல இருக்க பீட்ஸ் எல்லாமே பழைய உபயோகித்த A4 தாள்களில் இருந்து செய்தது தான்! எனவே அதிக செலவில்லாமல் எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களிலிருந்து செய்திடலாம்... வாங்க நண்பர்களே ....இது எப்படி செய்வதுனு பார்க்கலாம்...

இந்த க்வில்லிங் செயின் செய்ய தேவையான பொருட்கள் -
1. பழைய A4 தாள்கள் (அ) மெகஸின் தாள்கள்
2. 3 மிமி க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ்
3. பீட் கேப்ஸ்
4. ஜ்வெல் வயர் (அ) கம்பிகள்
5. சிறிய கோல்டன் பீட்ஸ்
6. ஹூக்
7. முத்து, மணி செயின், கற்கள்
8. ஃபெவிக்கால்

செய்முறை:

முதலில் A4 தாள் அல்லது மெகஸின் தாளை நீளவாக்கில் மெளிதான முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும் . இதைப் போல தேவையான அளவு ஸ்ட்ரிப்ஸ் வெட்டவும்

இப்பொழுது அவற்றை க்வில்லிங் டூல் கொண்டு டைட்டாக சுற்றவும். இறுதியில் பசை கொண்டு ஒட்டவும்

இதைப் போல் அனைத்து பீட்ஸும் சுருட்டவும்

இந்த பீட்ஸை விரும்பிய வண்ணத்தில் பெயிண்ட் செய்யவும் . நான் அக்ரிலிக் மெட்டாலிக்  பேர்ல் கலர் பயன்படுத்தியுள்ளேன்

அடுத்ததாக, பெயிண்ட் செய்து வைத்துள்ள அனைத்து பீட்களையும் வளைய கம்பியில் கோர்க்கவும். இரண்டு ஓரங்களிலும் சிறிய தங்க நிற மணி சேர்க்கவும்

நோஸ் ப்ளையர் கொண்டு மற்ற முனையை வளைக்கவும். மற்றொரு டிசைனாக பீட் கேப்ஸ் பயன்படுத்தலாம்
 
இப்பொழுது இரண்டு டிசைன் பீட்களையும் கோர்த்து செயின் செய்யவும்

பென்டன்ட் செய்ய, 3மிமி க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ் 7 எடுத்து க்வில்லிங் டூல் கொண்டு டைட்டாக சுற்றி பசை கொண்டு ஒட்டவும். பின்னர், பிடித்த வண்ணத்தில் பெயிண்ட் செய்யவும்.

பிறகு அதன் மீது விருப்பமான முறையில் முத்து, கற்கள் என ஒட்டி அலங்கரிக்கவும். செயினோடு இதை இணைக்க சிறிய வளையம் ஒன்று க்வில்லிங் ஸ்ட்ரிப் கொண்டு செய்து அதையும் பெயிண்ட் செய்யவும்

இறுதியில் பெண்டன்டை செயினுடன் இணைத்தால் அழகிய க்வ்ல்லிங் செயின் தயார்.

2 comments:

Comments system