Menu

வெஜ் பட்டியாலா (பஞ்சாபி சப்ஜி வகை)



அப்பள ரோல் செய்ய:
ஒரு கப் துருவிய காய்கறிகள் கேரட் காலிஃப்ளவர் முட்டைக்கோஸ்
1/4 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ்
1 மேசைக்கரண்டி எண்ணெய்
2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய பருப்பு வகைகள் (முந்திரி, பாதாம், பிஸ்தா)
சிறிது உலர் திராட்சை
1 தேக்கரண்டி சீரகம்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி கரம் மசாலா
உப்பு தேவைக்கேற்ப

5 அப்பளம்
2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கிய மல்லி இலை
எண்ணெய்: பொரிக்க

க்ரேவி செய்ய:
2 மேசைக்கரண்டி நெய்
1 கப் அரைத்த தக்காளி விழுது
1/2 கப் வெங்காய விழுது
ஒரு தேக்கரண்டி சீரகம்
ஒரு தேக்கரண்டி சோம்பு
ஒரு தேக்கரண்டி கரம் மசாலா
ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
2 மேசைக்கரண்டி ப்ரெஷ் க்ரீம்
1 மேசைக்கரண்டி வெண்ணெய்
உப்பு தேவைக்கேற்ப

அலங்கரிக்க:
50 கிராம் துருவிய பனீர்
பொடியாக நறுக்கிய மல்லி இலை

செய்முறை:
  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் உலர்திராட்சை பருப்பு வகைகள் மற்றும் துருவிய காய்கறிகள் அனைத்தையும் சேர்க்கவும்.
  2. பின்னர் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்ததாக அனைத்து மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி ஒரு மூடி கொண்டு மூடி மிதமான தீயில் 5 முதல் 6 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  4. இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
  5. ஒரு அப்பளத்தை எடுத்து அதை பாதியாக வெட்டி கையில் தண்ணீர் தொட்டு அதை மிருதுவாக்கவும்.
  6. அதில் செய்து வைத்த ஸ்டஃப்பிங்கை வைத்து முக்கோணமாக மடித்து இரண்டு ஓரங்களையும் தண்ணீர் கொண்டு சீல் செய்யவும்
  7. இவ்வாறு அனைத்து அப்பளங்களையும் செய்து பின்னர் ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஷாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்.
  8. கிரேவி செய்ய ஒரு கடாயில் நெய்யை சூடுபடுத்தி சீரகம் மற்றும் சோம்பு தாளிக்கவும்
  9. பின்னர் வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
  10. வெங்காயம் வெந்த உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.
  11. பின்னர் தக்காளி விழுதையும் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக விடவும்.
  12. மசாலா நன்றாக வெந்து சுருண்ட உடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிரேவியை கொதிக்கவிடவும்.
  13. இறுதியாக பொரித்து வைத்த அப்பள ரோலை கிரேவியில் சேர்த்து ஃப்ரெஷ் கிரீம் மற்றும் வெண்ணெய் சேர்த்து கிளறவும்.
  14. பரிமாறும் தட்டில் அப்பள ரோலை கிரேவியுடன் வைத்து மேலே துருவிய பன்னீர் மற்றும் கொத்துமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.
  15. சுவையான பாரம்பரிய வெஜ் பட்டியாலா தயார்
எனது டிப்:
இது ரொட்டி மற்றும் சப்பாத்திக்கேற்ற சுவையான சைட் டிஷ்

No comments:

Post a Comment

Comments system