Menu

மீன் மொய்லி/ மீன் மொல்லி


தேவையான பொருட்கள்: 
மீனை ஊறவைக்க (மேரினேட்):
நடுத்தரமான மீன்: 3 (துண்டுகளாக்கியது)
எலுமிச்சைச் சாறு: 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
உப்பு: தேவைக்கு
குழம்பு செய்ய:
தேங்காய் எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
கடுகு: 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை: 1 கொத்து
இஞ்சி & பூண்டு (நறுக்கியது/விழுது) : தலா 1 தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய்: 3
நறுக்கிய வெங்காயம் : 2 (நடுத்தர அளவுள்ளது)
தக்காளி: 2-3 (நறுக்கியது)
முதல் & இரண்டாம் தேங்காய்ப்பால் : 1 கப்
மூன்றாம் தேங்காய்ப்பால் : 1 கப்
மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி

செய்முறை:

  1. முதலில் மீன் துண்டுகளில் எலுமிச்சைச்சாறு,மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்
                                   
  2. தவாவில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து விடவும்
                                     
  3. மண்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
                                        
  4. வெங்காயம் வெந்ததும் (பொன்னிறமாக தேவையில்லை) தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் (தக்காளி குழைய கூடாது)
                                         
  5. அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்
  6. பின்னர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய்ப்பால் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்
                                          
  7. பிறகு அதில் பொரித்த மீன் சேர்த்து குறைந்த தீயில் 8-10 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையில் கரண்டி பயன்படுத்தாமல் இலேசாக சட்டியை அசைத்து கலக்கி விடவும்
                                          
  8. இறுதியாக மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி முதல் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது கறிவேப்பிலைகள் தூவி பிறகு அடுப்பில் ஏற்றி 1 நிமிடம் மட்டும் குறைந்த தீயில் வைத்து இறுதியாக ஒரு முறை கலக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்
                                          
  9. சுவையான அதிக காரம் இல்லாத மணமான மீன் மொய்லி தயார்
                                        
  10. ஆப்பம், இடியாப்பம், சோறு என அனைத்திற்கும் ஏற்ற குழம்பு இது!!
                                        
எனது டிப்:
எந்த வகை மீன் வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால் சிறிது கெட்டியான சதையுள்ளதாக இருந்தால் நல்லது

No comments:

Post a Comment

Comments system