Menu

பால் பவுடர் பர்ஃபி



தேவையான பொருட்கள்:
பால் பவுடர்: 1 கப்
பொடித்த சர்க்கரை : 1/2 கப்
நெய்: 1/4 கப்
பால் : 1/4 கப் (காய்ச்சியது)
நறுக்கிய பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
ஏலக்காய் தூள் : 1/4 தேக்கரண்டி

செய்முறை:

  1. முதலில் ஒரு நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கவும்
  2. பிறகு அதில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கலக்கவும்.
  4. அந்த கலவையில் பொடித்த சர்க்கரை சேர்க்கவும். இப்பொழுது நீர் விடும்.. நன்றாக கிளறி விடவும்
  5. கலவை திக்கான உடன் கை விடாமல் கிளற வேண்டும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  6. கலவை ஒரு சேர திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்
  7. ஒரு நெய் தடவிய தட்டில் அதை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் கொண்டு சமப்படுத்தி அதன் மீது நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவவும்
  8. சுவையான சுலபமான பால் பவுடர் பர்ஃபி தயார்..
  9. குளிர்ந்த பின் துண்டுகளாக்கி பரிமாறவும்

No comments:

Post a Comment

Comments system