Menu

அரிசி மாவு கேக்


கேக் விரும்பாத குழந்தைகள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இன்று நம்மில் பலருக்கு வருத்தமளிக்கும் விஷயம் - குழந்தைகள் உண்ணும் உணவுகளில் சேர்க்கப் படும் பொருட்கள் விஷம் போன்றவை! ஆம், நீங்கள் மைதா சேர்க்க தயங்குபவரா?? அப்பொழுது, இந்த சுவையான அரிசி மாவு கேகை உங்கள் குட்டீஸ்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள் !! (பொதுவாக பல ஊர்களில் பாரம்பரியமாக அரிசி மாவைக் கொண்டு கேக் போல செய்வார்கள் ... வட்டாரத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் ! அந்த செய்முறையையும் , நம் ஸ்பாஞ்ச் கேக் செய்முறையையும் இணைத்து நான் முயற்சித்த செய்முறை இது !! எங்கள் வீட்டில் படு ஹிட் :).....)

தேவையான பொருட்கள்:

முட்டை - 6
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
பொடித்த சர்க்கரை - 8 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கோகோ பவுடர் - 1 மேசைக்கரண்டி
பால் - 1/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:
1.முதலில் ஒரு பெரிய வாணலி / குக்கரில் ஸ்டாண்ட் போட்டு அதன் மேது ஒரு தட்டு வைத்து 15 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்

2. ஒரு கிண்ணத்தில் 2 முட்டையின் மஞ்சள் கரு, 2 மேசைக்கரண்டி வெண்ணெய், 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் சேர்த்து பீட்டரில் அடிக்கவும்

3. இளம் மஞ்சள் நிறத்தில் முட்டை நல்ல மிருதுவாக அடித்த பின் அதில் 6 மேசைக்கரண்டி அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும். இடையில் 1/4 கப் பால் சேர்த்துக் கொள்ளவும்



4. பிறகு அக்கலவையில் 1 மேசைக்கரண்டி கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும்


5. வேறொரு கிண்ணத்தில், 2 முட்டையின் வெள்ளைக் கரு எடுத்து நன்றாக நுரை பொங்க அடிக்கவும். சாஃப்ட் பீக் (soft peak)பதம் வந்ததும் 8 மேசைக்கரண்டி பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து ஸ்டிஃப் பீக் (stiff peak) பதம் வரும் வரை அடிக்கவும்



6. இதில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள அரிசி மாவு கலவையை சேர்த்து கவனமாக கட் அண்ட் ஃபோல்ட் (cut and fold) முறையில் கலந்து விடவும்


7. இந்த கேக் கலவையை வெண்ணெய் தடவிய கப் கேக் மோல்ட் அல்லது சிறிய கிண்ணங்களில் பாதி வரை ஊற்றவும்.


8. முற்சூடு செய்த பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். (கேக் டின் போன்ற பெரிய பாத்திரத்தில் செய்தால் 25-35 நிமிடங்கள் ஆகும்)




 9. கேக்கின் மீது க்ரீம் அல்லது சாக்லேட் சிரப் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்


No comments:

Post a Comment

Comments system