Menu

பனங்கிழங்கு கீர்



பனங்கிழங்கு பிடிக்காது இருக்குமா??? இதோ பனங்கிழங்கில் பாயசம் செய்து சுவையுங்கள் 👍
பனங்கிழங்கு கீர் / பாயசம்
தேவையான பொருட்கள் :
1. அவித்த பனங்கிழங்கு - 4
2. பால் - 1/2 லி (2 கப்)
3. பனஞ்சர்க்கரை - தேவையான அளவு (1/2 கப்) (சர்க்கரை/ வெல்லம்/ கருப்பட்டி எதுவானாலும் சேர்க்கலாம்)
4. நெய் - 2 மேசைக்கரண்டி 
5. முந்திரி, பாதாம் - 5-10
செய்முறை :
1. முதலில், பனங்கிழங்கை தோலுரித்து, நடுப்பகுதியில் உள்ள குச்சியை நீக்கவும். 2" துண்டுகளாக உடைத்து நார்களை நீக்கவும். 
2. இதை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். 
3. அடுத்து பாலை காய்ச்சவும். பொங்கியதும், தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் வைக்கவும். 
4. அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கை சேர்த்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். இடையே கிளறவும்.
5. இறுதியாக, பனஞ்சர்க்கரை சேர்த்து 2 - 4 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்.
சுவையான சத்தான பனங்கிழங்கு பாயசம் தயார்

No comments:

Post a Comment

Comments system