Menu

நோன்புக்கஞ்சி (சைவம்)



இஃப்தார் (நோன்பு துறத்தல்) என்றதுமே நம் நினைவுக்கு வருவது கம கமக்கும் நோன்பு கஞ்சி தான்.. அது இல்லாமல் இஃப்தார் விருந்து நிறைவுற்ற திருப்தி இருக்காது!! 

தேவையான பொருட்கள் :
அரிசி : 1/2 கப் (ஒன்று இரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்)
பாசிப்பருப்பு : 1/4 கப்
உளுந்து : 1/4 கப்
வெந்தயம் : 1 தேக்கரண்டி
பூண்டு : 4-5 பற்கள்
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி : 1 கையளவு
தக்காளி : 1 (நான் சேர்க்கவில்லை)
ரம்பை இலை
சின்ன வெங்காயம் : 4-5 நறுக்கி
பச்சை மிளகாய் : 2
இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
கறி மசாலா தூள் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
துருவிய தேங்காய்- 1/4 கப் (அ) தேங்காய்ப் பால் - 1/2 கப்
செய்முறை :
1) முதலில் ஒரு குக்கரில், அரிசி,பருப்பு, வெந்தயம், பூண்டு மற்றும் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆ‌கியவை சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 விசில் (அ ) குழைய வேக விடவும்
2) வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கறி மசாலா தூள் சேர்த்து தாளிக்கவும்.
3) குக்கரை திறந்து இலேசாக மசித்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். (முருங்கை கீரை சேர்க்கவும்)
4) தாளித்த கலவையை கஞ்சியில் சேர்த்து கொதிக்க விடவும் (இடையே பிடிக்காமல் இருக்க கிளறி விடவும்). தேங்காய்ப் பால் சேர்த்து, இறுதியாக மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த புத்துணர்ச்சி தரும் நோன்பு கஞ்சி தயார்.. 😋😋

No comments:

Post a Comment

Comments system