Menu

வாழைப்பூ வடை


தேவையான பொருட்கள்:

வாழைப்பூ : 1 கப்
துவரம்பருப்பு : 1/4 கப்
கடலைப்பருப்பு : 1/4 கப்
பச்சரிசி: 3 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் : 10-12
பூண்டு : 5
இஞ்சி : 1 துண்டு
காய்ந்த மிளகாய் : 4
நறுக்கிய மல்லி இலை : 1/4 கப்
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : பொறிக்க

செய்முறை:

  1. முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. வாழைப்பூவை நரம்பு நீக்கி, கருத்துவிடாமல் இருக்க மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்
  3. வாழைப்பூவை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும். அ‌ல்லது மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளலாம்
  4. பின்பு பருப்பை நன்றாக தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். பருப்பு மிகவும் மைய அரைத்து விட கூடாது.
  5. அரைத்து வைத்த கலவையில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம் மற்றும் மல்லி இலை சேர்த்து நன்றாக பிசையவும்.
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சிறிய சிறிய வடையாக தட்டி பொறித்து எடுக்கவும்.
  7. சுவையான சத்தான வாழைப்பூ வடை தயார்

No comments:

Post a Comment

Comments system