Menu

உளுவாக்கஞ்சி


தேவையான பொருட்கள்: 

அரிசி -2 மேசைக்கரண்டி
வெந்தயம் (Fenugreek) - 1 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து (Urad Dal )- 2 தேக்கரண்டி
பூண்டு ( Garlic) - 5 பல்
கருப்பட்டி (Palm Jaggery) - சுவைக்கேற்ப
தேங்காய்ப் பால் (Coconut Milk) - 200 மிலி (1கப்)
நாட்டுக்கோழி முட்டை - 2

செய்முறை:

  1. முதலில் அரிசி, வெந்தயம், உளுந்து,பாசிப்பருப்பு, பூண்டு, உளுந்து ஆகியவற்றை குக்கரில் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  2. பின்பு அக்கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.
  3. அதற்குள், ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. ஆறிய கஞ்சியை மிக்சியில் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.
  6. கருப்பட்டியை வடிகட்டி பிறகு அதை அடுப்பில் இருக்கும் கஞ்சியில் சேர்க்கவும். கைவிடாமல் சற்று கவனமுடன் ஒரு கரண்டி கொண்டு கலக்கிக் கொண்டே இருக்கவும்
  7. அடுத்ததாக, இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை பீட் செய்து கஞ்சியில் சேர்க்கவும். (நேரடியாக சேர்த்து கலக்கிவிட்டால் முட்டை சிறுசிறு துண்டுகளாக வெந்து விடும்.)
  8. சற்று நேரம் நன்றாக வேகவிட்டு, பின்பு இறுதியாக தேங்காய்ப் பால் சேர்த்து ஓரிரு முறை மட்டும் கலக்கிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். (தேங்காய்ப் பால் சேர்த்து வெகு நேரம் அடுப்பில் வைத்தால் கஞ்சியின் சுவையும் கெட்டு விடும் .தேங்காய்ப்பாலும் திரிந்தது போல் ஆகிவிடும்.)

No comments:

Post a Comment

Comments system