Menu

கோதுமை மார்பிள் கேக்



கேக் சாப்பிடனும் போல இருக்கு ...ஆனால் மைதா உடலுக்கு கெடுதியாச்சேனு கவலைப்பட்டு மைதா பயன்பாட்டை நிறுத்தி நாளாச்சா??? அப்போ இந்த செய்முறை உங்களுக்கு தான் .... மைதா தேவையில்லை, ஓவனும் தேவையில்லை, முட்டையும் வேணாம் !! சோ, இது ஒரு சைவ விரும்பிகளுக்கான ட்ரீட்னு கூட சொல்லலாம்

முழுக்கோதுமை மாவு... கூட கொஞ்சம் தயிர் இது தான் இந்த ரெஸிபியோட முக்கியமான பொருட்கள்... இதோ இந்த சுவையான சத்தான கோதுமை கேக்கை குழந்தைகள் விரும்புற மாதிரி மார்பிள் டிசைன்ல பண்றதுக்கான செய்முறை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 1 1/2 கப்
2. கெட்டித் தயிர் - 1 கப்
3. வெல்லம் - 1 கப்
4. கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
5. பால் - 3 மேசைக்கரண்டி
5. வெண்ணெய் - 4 மேசைக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
6. அலங்கரிக்க பாதாம், முந்திரி, உலர்திராட்சை - 1/4 கப்
7. வெனிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
8. பேக்கிங்க் பவுடர் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:
1. முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடரை சலித்து எடுத்துக் கொள்ளவும்
2. மற்றொரு கிண்ணத்தில், தயிர், வெல்லம், வெண்ணெய், பால் மற்றும் வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
3. இப்பொழுது கோதுமை மாவுக் கலவையை இதில் சேர்த்து கட்டி விழாமல் நன்றாக கலந்து விடவும்
4. முந்திரி, பாதாம், உலர்திராட்சை ஆகியவற்றை இதில் சேர்த்து கலந்து விட்டு மாவை இரண்டு பங்காக பிரிக்கவும்
5. ஒரு பாதியில் மட்டும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்
6. ஒரு கேக் டின்னை எடுத்து அதில் வெண்ணெய் தடவி, ஒரு கேக் மாவை டின்னின் நடுப்பகுதியில் ஊற்றவும்.
7. அடுத்து ஒரு கரண்டி கோகோ கலந்த மாவை முதலில் ஊற்றிய மாவின் நடுப்பகுதியில் ஊற்றவும்
8. இவ்வாறு அனைத்து மாவையும் நடுவில் ஊற்றிக் கொள்ளவும்
9. ஒரு டூத்பிக் அல்லது குச்சியைக் கொண்டு நடுப்புறத்திலிருந்து வெளியேயும், வெளிப்புறத்திலிருந்து உள்ளேயும் மாவை இழுத்து பேட்டர்ன் வரையவும்

No comments:

Post a Comment

Comments system