Menu

கேரட் ஹல்வா


தேவையான பொருட்கள்:

கேரட் 1/4 கிலோ
பால் 1 கப்
சர்க்கரை 3/4 கப்
நெய் 4 மேசைக்கரண்டி
முந்திரி 1/4 கப்
கோவா (இனிப்பு இல்லாதது) 50 கிராம்

செய்முறை:

  1. முதலில் குக்கரில் நெய் விட்டு துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும். இவ்வாறு செய்தால் நல்ல சுவை கூடும்
  2. பின்னர் பால் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. பின்னர் பால் வற்றும் வரை கிளறவும்
  4. பா‌ல் வற்றிய பின் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை சேர்த்த உடன் தண்ணீர் விடும். என்வே இன்னும் சிறிது நேரம் கிளறவும்.
  5. இப்போது இனிப்பு இல்லாத கோவா சேர்த்து கிளறவும். இது கூடுதல் சுவை கொடுப்பது மட்டுமின்றி ஹல்வா நன்றாக தண்ணீர் விடாமல் திக்காக வருவதற்கு உதவும்.
  6. இறுதியாக இரண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி வறுத்து அதை ஹல்வாவில் சேர்த்து இறக்கவும். சுவையான கேரட் ஹல்வா தயார்
எனது டிப்:
கோவா இல்லாவிட்டால் சில பிஸ்கட்களை மிக்ஸியில் பொடித்து சேர்க்கலாம். சுவை கொடுக்கும்.

No comments:

Post a Comment

Comments system