Menu

பாசிப்பயறு சாலட்

முளைகட்டிய பாசிப்பயறு: 2 கப்
துருவிய கேரட்: 1/4 கப்
துருவிய வெள்ளரிக்காய்: 1/6 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்: 1/6 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி: 1/6 கப்
துருவிய தேங்காய்: 1/6 கப்
கெட்டித்தயிர்: 4 மேசைக்கரண்டி
மயோனைஸ்: 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய மல்லி புதினா: ஒரு கையளவு
உப்பு: 1 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு: 1 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய பாசிப்பயறு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், துருவிய வெள்ளரிக்காய், துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் சேர்க்கவும்
  2. பிறகு அதில் தயிர், மயோனைஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு முறை கிளறி பரிமாறவும்
எனது டிப்:
எளிதாக மற்றும் விரைவாக முளைகட்ட, பாசிப்பயறை ஊறவைத்த பிறகு ஹாட்பாகஸில் போட்டு 6−8 மணிநேரம் மூடிவைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Comments system