Menu

பனங்கிழங்கு லட்டு




பனங்கிழங்கு நம் பாரம்பரியத்தின் முக்கியமான ஒரு அங்கம்!!
பனங்கிழங்கை பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியுமா??? ஆனால் பனங்கிழங்கை ஒரே மாதிரி அவிச்சு மட்டுமே சாப்பிட்டு அலுத்துடுச்சா?? அப்போ கண்டிப்பா இந்த செய்முறை உங்களுக்கு தான் !! சிறுவர்களுக்கு தாராளமா செய்து கொடுக்கலாம்.. நார்களை நீக்கிடுறதால அவங்க விரும்பி சாப்பிடுவாங்க..

தேவையான பொருட்கள்:
அவித்த பனங்கிழங்கு - 7/8
நறுக்கப்பட்ட தேங்காய் – ஒரு கைப்பிடி அளவு அல்லது சிறிது கூட.
பனஞ்சக்கரை - 4-5 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பருப்புகள் (பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட்)
நெய் - சிறிதளவு

செய்முறை:

1. அவித்த பனங்கிழங்குகளை எடுத்து அவற்றின் தோலையும் நடுப்பகுதியில் இருக்கும் குச்சி போன்றவற்றையும் நீக்க வேண்டும்.
2. பிறகு நார்களை உரித்தெடுக்க வேண்டும். இயன்றளவு நார்களை நீக்கிவிட வேண்டும்.
3. பிறகு பனங்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
4. பனங்கிழங்கு துண்டுக்கள், தேங்காய் துண்டுகள் இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். மிகவும் பேஸ்ட் போல் வரக் கூடாது.
5. ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அதனுடன் பனஞ்சக்கரையும் பொடித்த பருப்பு வகைகளையும் சேர்த்து நன்றாக பிசையவும்.
6. கையில் சிறிது நெய் தடவி அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
7. மேலே சிறிது பொடித்த பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்

No comments:

Post a Comment

Comments system