Menu

கம்பு சாக்கோ கேக்


கம்பு மாவு : 1/2 கப்
கோதுமை மாவு: 1/2 கப் + 1 தேக்கரண்டி
கோகோ பவுடர்: 4 மேசைக்கரண்டி
பொடித்த சர்க்கரை: 1 கப்
பேக்கிங் பவுடர்: 1 தேக்கரண்டி
முட்டை: 2
வெண்ணெய்: 4 மேசைக்கரண்டி+ 1/2 தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ்: 1/2 தேக்கரண்டி
பால்: தேவைக்கேற்ப

செய்முறை:

  1. ஒரு வாணலியில் / குக்கரில் (கேஸ்கட்,விசில் போடாமல்) ஸ்டாண்ட் வைத்து மூடி வைத்து 15 நிமிடம் ப்ரி ஹீட் செய்யவும்
  2. முதலில் அனைத்து ட்ரை(dry) பொருட்களையும் சல்லடையில் சலித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு முட்டையை நன்றாக அடித்து அதில் வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. அதில் கலந்து வைத்துள்ள ட்ரை பொருட்களை சேர்த்து கட்டி விழாமல் நன்றாக கலக்கவும். கேக் கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் மட்டுமே சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளவும்.
  5. கேக் டின்னில் சிறிது வெண்ணெய் தடவி கோதுமை மாவு தூவி டஸ்ட் செய்யவும். அதில் தயாரித்து வைத்துள்ள கலவையை ஊற்றி அதை சூடுபடுத்திய வாணலி/ குக்கரில் வைத்து பேக் செய்யவும். மிதமான தீயில் மட்டுமே வைக்க வேண்டும்.
  6. சுமார் அரை மணி நேரம் கழித்து டூத்பிக் கொண்டு வெந்துவிட்டதாவென்று பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி கூலிங் ரேக்கில் வைக்கவும்.
  7. சாக்லேட் சிரப்/ கனாசே / நடஸ் தூவி அலங்கரித்து பரிமாறலாம்

No comments:

Post a Comment

Comments system