Menu

குல்ஃபி மாம்பழம்



அடிக்குற வெயிலுக்கு இதமா ஒரு ஐஸ்க்ரீமோ, குல்ஃபியோ சாப்பிட்டா நல்லாருக்கும்னு யோசிச்சுட்டே நடந்தப்போ கண்ணில் பட்டதுதான் இந்த மாம்பழ குல்ஃபி!! நம் தேசத்தலைநகரின் புகழ் தான் இந்த குல்ஃபி .. எத்தனை ரகமான ஐஸ்க்ரீம்கள் வந்தாலும் நம்மூர் குல்ஃபிக்குன்னு ஒரு தனிச் சுவை இருக்கல்லவா?? அதுவும் இப்படி பழங்களுல் நிறைத்ததுனா சொல்லவா வேண்டும் ?? 
இதை ருசிக்க நாம டெல்லிக்குத் தான் போகனுமா என்ன?? வீட்டிலேயே செஞ்சி அசத்திட்டாப் போச்சு..இதோ எப்படி செய்யறதுன்னு பாப்போம்

தேவையான பொருட்கள்:
பால்- 1/2 லிட்டர்
மில்க் மெய்ட் - 1/2 கப்
மாம்பழங்கள்- 3-4
பொடித்த பருப்பு வகைகள் - 1/4 கப் (முந்திரி, பாதாம், பிஸ்தா)
பொடித்த ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:
1. முதலில் பாலை ஒரு சட்டியில் ஊற்றி கொதிக்க விடவும்.பால் கொதித்து சில நிமிடங்களுக்கு பிறகு மில்க்மெய்டு அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்

2. பால் மூன்றில் ஒரு பங்காக வற்றியவுடன் பொடித்த பருப்பு வகைகள், பொடித்த ஏலக்காய் மற்றும் ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்
3. இந்த குல்ஃபி கலவை நன்றாக திக்காக ஆனவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்
4. ஒரு மாம்பழத்தை எடுத்து நன்றாக கழுவி அதன் மேற்புறத்தில் வட்டவடிவமாக கத்தியை கொண்டு நறுக்கி எடுக்கவும்

5. பிறகு கத்தி அல்லது ஒரு ஸ்பூன் பயன்படுத்தி நடுவில் உள்ள விதையை மட்டும் கவனமுடன் எடுக்க வேண்டும்
                             
6. இப்பொழுது குழியாக உள்ள நடுப்பகுதியில் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, வட்டமாக நறுக்கிய மேற்பகுதியை வைத்து மூடவும். 
                              
இவ்வாறு அனைத்து மாம்பழங்களையும் தயா‌ரித்து ப்ரிஜ்ஜில் 8-12 மணி நேரம் வரை உறைய வைக்கவும்
7. பரிமாறும் சமயத்தில் மாம்பழங்களை எடுத்து தோல் சீவி விரும்பிய வடிவங்களில் வெட்டி மேலே பொடித்த பருப்பு தூவி பரிமாறவும்.



No comments:

Post a Comment

Comments system